2024 ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 01-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பரவாயில்லாமல் இருக்கும். கடன் அதிகமாக இருப்பவர்களுக்கு, அந்த பிரச்சினை குறைவதற்கான சூழ்நிலை உள்ளது. கடன் மட்டுமல்ல நோயின் தன்மையும் குறைய வாய்ப்புள்ளது. சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இப்போது ஆரம்பிக்க வேண்டாம். ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் பண்ட், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவிலேயே செய்யுங்கள். நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக வர வாய்ப்புள்ளது. உறவுகள் விஷயத்தில் கொஞ்சம் கவனம் தேவை. ஏனென்றால் அவர்களை விட்டு பிரிந்து இருக்கக் கூடிய காலம் அல்லது அவர்களால் நிம்மதியற்ற சூழல் உண்டாகும். உயர்கல்வி நன்றாக உள்ளது. பாஸ்போர்ட், விசா, பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் அவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. யாரிடமாவது கடன் கேட்டிருந்தால் அவை கிடைப்பதில் தடைகள் இருக்கிறது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். இன்னும் கொஞ்சம் தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள். இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.
