2024 ஜனவரி 9 முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

முயற்சிகள் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். எண்ணம், சிந்தனையை தெளிவாக வைத்திருக்க வேண்டும். வாழ்க்கை லட்சியத்தை நோக்கி பயணித்தால், ஜெயம் கிடைக்கும். கல்வி சிறக்கும். அம்மாவின் உடல்நலத்திலும் உங்களுடைய உடல்நலத்திலும் கவனம் தேவை. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு ஏற்ற லாபம் உண்டு. விவசாயத்திலும் நல்ல மகசூல் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. எதிர்பாராத தெய்வ தரிசனம் கிட்டும். உடன் பணிபுரிபவர்கள் உதவி செய்தாலும் பிரச்சினைகள் இருக்கும். மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். பணிமாற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டு. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிக்கலாம். மகாலட்சுமி மற்றும் சிவ ஸ்தலத்திலுள்ள அம்பாளை தரிசனம் செய்யுங்கள்.

Updated On 8 Jan 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story