2024 மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

குரு பகவான் மகிழ்ச்சி ஸ்தானத்தில் இருந்து உங்களை பார்ப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்கும். உங்களை அறியாத சந்தோஷம் உண்டாகும். சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேலையில் கவனம் செலுத்துவது மிக முக்கியம். கடன் இருந்தால் அது குறைவதற்கு வாய்ப்புள்ளது. பெரிய அளவிலான நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் அதில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரத்தை பொறுத்தவரையில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. நல்லதொரு முன்னேற்றம் அமையும். விற்பனையாகாத சொத்துக்கள் விற்பனையாக வாய்ப்புள்ளது. உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் மற்றும் லாபம் இருக்கும். சொந்த தொழில் சுமாராக இருக்கும். தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை ஏற்படும். திருமண வாழ்க்கையும் பரவாயில்லை. பாஸ்போர்ட், விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால் அது வந்து சேரும். அப்பாவால் நன்மை ஏற்படும். விநாயகர் மற்றும் கிருஷ்ணன் வழிபாடு முன்னேற்றத்தை தரும்.

Updated On 12 March 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story