2024 ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஒருபுறம் மகிழ்ச்சி, சந்தோசம், இன்னொருபுறம் அதை முழுமையாக அனுபவிக்க முடியாத சூழ்நிலை இரண்டும் இருக்கும். தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுங்கள். எதிர்கால முன்னேற்றங்களை நோக்கி உங்களின் பயணம் இருக்க வேண்டும். எப்போதும் உங்களை சுற்றி இனம் புரியாத ஒரு கவலை, பீதி, மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். உங்களின் தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதுடன், அவர் ராகுவின் நட்சத்திரத்தில் இருப்பதால் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இடம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் இருக்கிறது. விவசாயத்துறையில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த லாபம் இருக்கிறது. நல்ல மகசூல் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை எந்த துறையில் இருந்தாலும் ஒரு திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். அதனால் செய்யும் வேலையை திருப்தியோடு செய்யுங்கள். உங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் கலந்தாலோசிக்காதீர்கள். குழந்தைகளை பிரிந்து இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவர்களுக்காக செலவு செய்வீர்கள். இந்த வாரம் மகாலட்சுமி மற்றும் சிவன் கோயிலில் இருக்கும் அம்பாளை வழிபாடு செய்து வந்தால் ஏற்றம் கிடைக்கும்.

Updated On 1 April 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story