2024 மே 21-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் ராசியில் குரு பகவான் 6-ஆம் இடத்தில் இருப்பதால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேலைக்கு இன்டர்வியூ அட்டன் செய்திருந்தால் தேர்வு செய்யப்படுவீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கண்டிப்பாக கிடைக்கும். நேரடியான, மறைமுகமான எதிரிகளை ஜெயிப்பீர்கள். நல்லதொரு வேலையாட்கள் அமைவார்கள். யாருடைய பணமாவது உங்கள் கையில் இருக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக வந்து சேரும். யாரை நம்பி இருக்கிறீர்களோ, அவர்கள் ஏதோ ஒரு ரூபத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போக வாய்ப்புள்ளது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமாக இல்லை. கூட்டுத்தொழில் செய்பவராக இருந்தால் உங்கள் பார்ட்னர் உங்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மணவாழ்க்கையில் கணவன் - மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படும். இந்த வாரம் முழுவதும் ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வாருங்கள். குறிப்பாக நரசிம்மரை வழிபட்டு வந்தால் நன்மை ஏற்படும்.

Updated On 21 May 2024 7:47 AM GMT
ராணி

ராணி

Next Story