2024 ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

அரசு, தனியார் எந்த துறையில் பணியாற்றினாலும் நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்பட்டால் எதிர்காலம் நன்றாக இருக்கும். வேலையில் பணிச்சுமை, மன அழுத்தம் என்பது இருக்கும். உயர் அதிகாரிகள், உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு தர வாய்ப்பில்லை. அதனால் வேலையில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். அதைவிட முக்கியம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னருக்காக நீங்கள் உழைப்பீர்கள். தேவையில்லாத மனக் குழப்பங்கள் வேண்டாம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பேசாதீர்கள். எண்டெர்டெயின்மெண்ட், டூர், டிராவல் ஆகியவை இருக்கின்றன. ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் வெற்றியடைந்து, திருமணத்தில் முடிய வாய்ப்புள்ளது. உயர்கல்விக்காக வௌிநாடு செல்ல நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இந்தவாரம் முழுவதும் நரசிம்மர் மற்றும் முருகனை வழிபாடு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்றம், முன்னேற்றம் இருக்கும்.

Updated On 23 July 2024 4:19 AM GMT
ராணி

ராணி

Next Story