2023, ஜூலை 17 முதல் 24 தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரத்தில் நல்லதும் கெட்டதும் சேர்ந்தே வரும். 18,19, 20 ஆகிய 3 நாட்கள் சிரமமாக இருக்கும். எனவே பிரார்த்தனைக்கு பிறகு நாளை தொடங்கவும். பிறர் சொல்வதைக் கேட்டு நடந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். நாம் திட்டமிட்டபடி நடக்காது என்பதை மனதில் வைத்து வாழ்க்கையின் போக்கிலேயே போவது நல்லது. உங்களுடைய தன்னம்பிக்கை, பேச்சு, குழந்தைகள், வீடு, வாகனம் என அனைத்துமே நன்றாக இருக்கும். அதே சமயம் வேலையில் குறிப்பாக உயர் அதிகாரியுடன் பிரச்சனைகள் வரும். பிறர் செய்த தவறுக்காக அவமானப்படும்படியான சூழல் அமையும். கணவனுடனோ, மனைவியுடனோ அல்லது அப்பாவுடனோ பிரச்சனை வரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஜாக்கிரதையாக பேசுவது நல்லது.

Updated On 20 July 2023 6:35 AM GMT
ராணி

ராணி

Next Story