2024 பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். தேவையில்லாத விஷயங்களை பேச வேண்டாம். மற்றவர்கள் கூறுவதை கவனமுடன் கேளுங்கள். தேவையில்லாமல் யாருக்கும் கவுண்டர் கொடுக்க வேண்டாம். இவற்றை பின்பற்றினால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். செய்யும் வேலைகளில் பொறுமை, நிதானம் அவசியம். சொத்துக்கள் விற்பனையாகும். வீடு, இடம் மாறுவதில் சின்ன தடைகள் ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியை தரும். புதிய காதல் மலரும். எந்த பணியில் இருப்பவர்களாக இருந்தாலும் உங்கள் வேலை மற்றும் சம்பளத்தில் திருப்தி ஏற்படும். சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் நன்றாக உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் சிறப்பாக இருக்கும். சிவன் மற்றும் பெருமாள் தலத்தில் உள்ள தாயார் வழிபாடு ஏற்றத்தை தரும்.

Updated On 5 Feb 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story