2024 மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுங்கள். வெற்றி பெறுவீர்கள். உங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெரும். சிந்தனைகள் வித்தியாசமாக இருக்கும். எடுத்த காரியங்கள் வெற்றி பெரும். இந்த வாரம் உங்களின் உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. புதிதாக சொத்துக்களை வாங்குவீர்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மகசூல், லாபம், வருமானம் இருக்கிறது. அதுமட்டுமின்றி உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ராசிக்கு 5-ஆம் இடத்தில் குரு, புதன் இருப்பதால் புத்திர பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை, வருமானம் நன்றாக உள்ளது. காதல் வெற்றிபெற்று திருமணத்தில் முடியும். புதிய காதல் மலரும். உங்களது இஷ்ட தெய்வத்தை குறிப்பாக பெண் தெய்வத்தை வழிபடுவது ஏற்றத்தைத் தரும்.

Updated On 25 March 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story