2025 ஜூன் 17-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஏனென்றால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம். தொடர் முயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். நீங்கள் நம்பியவர்கள் உண்மையாக உங்களுக்கு இருப்பார்கள். வீடு மாறவும், நீண்ட நாட்களாக விற்க முடியாமல் இருந்த அசையா சொத்துக்களை விற்கவும் நல்ல வாய்ப்புகள் உண்டு. விவசாயத்தில் லாபம் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த தொழில்களில் உற்பத்திக்கு ஏற்ற விற்பனை மற்றும் லாபம் இருக்கும். பங்குச்சந்தை, லாட்டரி, ஆன்லைன் வணிகம் போன்ற யூக வணிகங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த வாரம் மகாவிஷ்ணுவையும், பிரம்மாவையும் வழிபடுவது நன்மை பயக்கும்.
