2025 ஜூலை 22-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசியை குருவும் சனியும் பார்ப்பதால் நன்மை இருந்தாலும், தேவையற்ற மனக் குழப்பங்களைத் தவிர்க்கவும். உழைத்துச் சம்பாதிக்கும் பணம் கையில் தங்காது. புதிய முயற்சிகள் சுமாராகவே இருக்கும். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உறவுகளைப் பராமரிக்கவும். உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்களும், பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். இந்த வாரம் எல்லாவற்றிலும் திருப்தியின்மை இருக்கும். விவசாயிகளுக்கு லாபமும் மகசூலும் உண்டு. உற்பத்தித் துறையினருக்கு விற்பனையும், லாபமும் கிடைக்கும். கல்விக்கு இந்த வாரம் போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும், கவனம் செலுத்துங்கள். பங்குச்சந்தை, லாட்டரி, ஆன்லைன் வணிகம், கிரிப்டோ கரன்சி போன்ற யூக வணிகங்களில் முதலீடு செய்ய வேண்டாம். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபத்தைத் தரும், உங்கள் பணம் முடக்கப்படலாம். வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்கும். அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் தொழில் நன்றாக இருக்கும். வேலை மாற்றம் செய்யலாம். ஆனால், தொழிலில் பெரிய அளவில் போராட்டம் இல்லை. சிவனையும், பெருமாளையும் வழிபடுங்கள்.
