2025 ஆகஸ்ட் 05-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்க வாய்ப்பு அதிகம். நீண்ட நாட்களாக கடன் விண்ணப்பித்தவர்களுக்கு கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு. எந்த காரணத்திற்காக கடன் வாங்குகிறீர்களோ, அது வெற்றிகரமாக அமையும். வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும், வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையை விட்டு வெளியேறி புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அனுபவமுள்ளவர்களுக்கு ஏற்ற வேலைகள் அமைய வாய்ப்பு உண்டு. நேர்காணலில் பங்கேற்றவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உண்டு. ஆறாம் இடத்தை சனி பகவான் பார்ப்பதால், போட்டித் தேர்வுகள், எழுத்துத் தேர்வுகள், நேர்காணல்களில் வெற்றி கிடைக்கும். வழக்குகள் மற்றும் சண்டைகளில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளை வெல்வதற்கான வாய்ப்பு உண்டு. வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தகராறு, நிச்சயமற்ற தன்மை, லாபம் குறைதல் போன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம். தந்தையின் ஆரோக்கியத்திலும் உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். சிறு பிரச்சினை என்றாலும் மருத்துவரை அணுகவும். குரு உங்கள் ராசியையும் முயற்சி ஸ்தானத்தையும் பார்ப்பதால், உங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெறும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். சிறுதொழில், சுயதொழில், வீட்டிலிருந்து செய்யும் தொழில், ஆன்லைன் பிசினஸ் செய்பவர்களுக்கு பரவாயில்லை. சிவபெருமான் மற்றும் பிரம்மாவை வழிபடுவது நல்லது.
