2025 செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் உயர்கல்வி மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் நன்றாக இருக்கும். குருவும், சனியும் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் இருந்தாலும், மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவற்றை தவிர்ப்பது நல்லது. உங்கள் முயற்சிகளுக்கு ராகுவின் ஆதரவு இருப்பதால், நீங்கள் விரும்பிய இலக்கை அடைய வாய்ப்பு உண்டு. உங்கள் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் வெற்றி பெறும். நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டியவர்களுடன் இடைத்தரகர்கள் இல்லாமல் பேசுங்கள். உங்களை மேம்படுத்திக் கொள்ளவும், பிரச்சனைகளைத் தீர்க்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் இருக்கும். உறவுகளால் மகிழ்ச்சியும் நன்மையும் உண்டு. பிரிந்து போன உறவுகள் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. சொத்து மற்றும் ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் தீரும். சொந்தத் தொழில் சுமாராக இருக்கும். இருந்தும் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். இந்தவாரம் திருமண வாழ்க்கை மற்றும் வேலை இரண்டுமே சாதாரணமாக இருக்கும். வேலை மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு. தந்தையின் அன்பு ஆதரவு கிடைக்கும். இந்த வாரம் நீங்கள் சிவபெருமானையும், காளி தேவியையும் வழிபடுவது நல்லது.
