2023, செப்டம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

மனதில் நினைப்பதை எங்கு, எப்படி பேசவேண்டும் என சிந்தித்துப் பேசுவீர்கள். வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். பெரியவர்களின் வழிகாட்டுதல் வேலையில் கிடைக்கும். கணவன் - மனைவியிடையே தவறான புரிதல்கள் ஏற்படலாம். பொருளாதார சுணக்கம் ஏற்படும். ஒரு செயலை செய்ய நினைக்கும்போது நிறைய தடைகள், சிறுசிறு சண்டைகள் ஏற்பட்டு, அதனால் மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து விடுபட, சூரியன், குரு பகவான் மற்றும் முருகனுக்கு விளக்கேற்றினால் காரியசித்தி உண்டாகும். 12-ஆம் தேதி சற்று கடினமாக இருக்குமென்பதால் பெருமாளுக்கு விளக்கேற்றி வைத்து செயல்களை தொடங்குங்கள்.

Updated On 11 Sep 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story