2023, நவம்பர் 21 முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சமுதாயத்தில் பெயர், புகழ், அந்தஸ்து கூடும். எண்ணங்கள், சிந்தனைகள் வித்தியாசமாக இருக்கும். எந்த செயலையும் தள்ளிப்போட வேண்டாம். சிந்தித்து செயல்படுங்கள். உறவுகளிடம் கவனமாக நடந்துகொள்ளுங்கள். தேவையற்ற பிரயாணங்கள் வேண்டாம். வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழல் அமையும். நீண்ட நாட்களாக விற்காமல் இருந்த சொத்து விற்கப்படும். அதேபோல் சொத்துகள் வாங்கும் வாய்ப்புகளும் அதிகம். அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மகிழ்ச்சி இருக்கும். புது காதல் கிடைக்கும். ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு வெற்றியாக முடியும். இரண்டாம் திருமண காரியம் கைகூடி வரும். பார்ட்னர்ஷிப் பிஸினஸ் செய்பவர்களுக்கு பார்ட்னர் பிரிந்துசெல்ல வாய்ப்புகள் உண்டு. கம்பெனி மாற நினைப்பவர்கள் முயற்சிக்கலாம். அப்பா உடல்நலத்தில் கவனம் தேவை.

Updated On 21 Nov 2023 12:00 AM IST
ராணி

ராணி

Next Story