2023, டிசம்பர் 5 முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் மற்றொரு பக்கம் அந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளும், தடைகளும் மாறி மாறி இருக்கும். குழந்தைகளால் நற்பலன்களும் தேவையற்ற செலவுகளும் இருக்கும். தெய்வ அனுகூலம் உண்டு. அனைத்து செயல்களையும் யோசித்து செய்யுங்கள். தேவையற்ற செயல்களில் இறங்காமல் அதனை தள்ளிப்போடுங்கள். தேவையற்ற விரயம், நஷ்டம், மருத்துவச் செலவுகள், கவலை மற்றும் மன குழப்பம் இருக்கும். சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். கல்வி சிறப்பாக இருக்கும். ஆனால் உயர் கல்வியில் தடை ஏற்படலாம். சுய தொழில் சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸ் செய்பவர்களிடமிருந்து பார்ட்னர் பிரிந்துபோக வாய்ப்புகள் உள்ளது. வேலையில் கவனம் செலுத்தாவிட்டால் வேலையிலிருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளது.

Updated On 6 Dec 2023 6:16 AM GMT
ராணி

ராணி

Next Story