2023 டிசம்பர் 26 முதல் 2024 ஜனவரி 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி இருக்கும். தெய்வ அனுகூலம் உண்டு. எதிர்பாராத தெய்வ தரிசனம் கிடைக்கும். காரியங்கள் சாதகமாக அமையும். எந்த செயலையும் தள்ளிப்போடாமல் உடனடியாக முடிக்கவேண்டும். யாரையும் நம்பாமல் இருக்க வேண்டாம். அரசியல், உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். புது காதல் மலர வாய்ப்பு உள்ளது. உடன் பணிபுரிபவர்கள், உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வருவாய்க்கு ஏற்ற செலவு உண்டு. பெருமாள், சிவ ஸ்தல வழிபாடு செய்ய சிறப்பான பலன்கள் அமையும்.

Updated On 25 Dec 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story