2024 பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எதிர்பாராத சாமி தரிசனம் ஏற்படும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு, மரியாதை கூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் புது வரவு வருவதற்கான சூழல்கள் உண்டாகும். சுபகாரியங்கள் நடந்தேறும். பணம், பொருள், தனம் இருப்பதால் பொருளாதாரத்தில் பிரச்சினைகள் இருக்காது. உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். எண்ணங்கள் ஈடேறும். நினைப்பது நடக்கும். இந்த வாரம் உங்களுக்கு தேடுதல் என்பது அதிகமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்கும். வேலையில் எதிர்பார்க்கக்கூடிய, எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். உடல் உழைப்பு சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வெற்றி கிட்டும். வழக்குகளில் ஜெயிப்பீர்கள். வங்கி கடன் இருந்தால் அடைப்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகளும் சிறப்பாக உள்ளது. அப்பாவால் நற்பலன்கள், மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். துர்க்கை, அம்மன் மற்றும் காளியை வழிபடுவது உயர்வை தரும்.

Updated On 13 Feb 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story