2024 பிப்ரவரி 20 முதல் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி சந்தோஷம் உண்டாகும். தெய்வ அனுகூலம் இருக்கும். குழந்தை பாக்கியம் அல்லது குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சுப நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத வெளியூர் பயணம் உண்டாகும். தேவையில்லாத முயற்சிகள், குறிப்பாக புதிய முயற்சிகள், சிந்தனைகள் வேண்டாம். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழல்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக விற்காமல் இருக்கும் சொத்துக்கள் விற்பனையாகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழில் மற்றும் கூட்டு தொழில், சிறு தொழில், ஆன்லைன் தொடர்பான தொழில் ஆகியவை சிறப்பாக உள்ளன. உயர் கல்வியை தொடரலாம். வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் வெற்றியை கொடுக்கும். இந்த வாரம் முழுவதும் சிவ தரிசனம் செய்வது நல்லது. குறிப்பாக நரசிம்மர் வழிபாடு நன்மை அளிக்கும்.

Updated On 19 Feb 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story