2024 பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நினைப்பது நடக்கும். நம்பியவர்கள் ஏதோ ஒரு வகையில் உதவி செய்வார்கள். வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். சொத்துக்கள் விற்பனையாவதில் சிக்கல், பாகப்பிரிவினையில் பிரச்சினை ஆகியவை சரியாகும். கல்வி மற்றும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனைக்கு தகுந்த லாபம் கிடைக்கும். அதிலும் விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டு. சொந்த தொழில் நன்றாக உள்ளது. இந்த வாரம் சனி பகவான் மற்றும் தன்வந்திரி பகவானை வழிபட்டால் நல்லதொரு முன்னேற்றம் கிடைக்கும்.

Updated On 27 Feb 2024 3:56 AM GMT
ராணி

ராணி

Next Story