2024 மார்ச் 5-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீண்ட நாட்களாக போக நினைத்து, போக முடியாத கோயிலுக்கு சென்று வருவீர்கள். அதன் மூலம் தெய்வ தரிசனம், தெய்வ அனுகூலம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி சந்தோஷம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை. புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொத்துக்கள் விற்பனையாகும். தேவையில்லாத சிந்தனைகளை தவிர்த்துவிடுங்கள். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழல் உருவாகும். வேலையில் கவனம் செலுத்துங்கள். 7-ஆம் தேதிக்கு பிறகு வேலையில் உங்களுக்கே திருப்தி இல்லாத மனநிலை உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை ஏற்படும். அப்பாவுடைய அன்பு, ஆதரவு, அவரால் நன்மை இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் சுமாரான முதலீடு செய்யுங்கள். முருகன், துர்க்கை மற்றும் காளியை வழிபட்டால் ஏற்றம் பெறுவீர்கள்.

Updated On 5 March 2024 2:44 AM GMT
ராணி

ராணி

Next Story