2024 மார்ச் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வாழ்க்கையில் நீங்கள் நம்பியவர்கள் உதவி செய்வார்கள். எல்லாவிதமான உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைக்கும். சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. அவர்களால் நன்மை ஏற்படும். பொருளாதார அளவில் எந்த பிரச்சினையும் இல்லை. கையில் பணம், தனம் இருக்கும். புதிய ஆடைகள், நகை வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான சூழல்கள் உள்ளன. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். எண்ணங்கள் அனைத்தும் செயலாக்கம் பெரும். பங்குனி மாதமாக இருந்தாலும் வீடு மாற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனைக்கு தகுந்த லாபம் இருக்கிறது. கல்வியில் கவனம் செலுத்துவது முக்கியம். வேலையை பொறுத்தவரையில், திருப்தி இருக்காது. டென்ஷன், அழுத்தம் இருக்கும். அதனால் நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கும். ஆஞ்சநேயர் மற்றும் நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனி பகவானுடைய வழிபாடு நற்பலன்களை தரும்.

Updated On 18 March 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story