2024 ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத டூர் அல்லது டிராவல் இருக்கும். பெரிய அளவில் உடல் உழைப்பு இல்லாமல் சம்பாத்தியம் செய்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் ஏற்படும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, டிரேடிங், ரேஸ், மியூச்சுவல் ஃபண்ட், டிஜிட்டல் கரன்சி, கோல்ட் பாண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள். மினிமம் பிராஃபிட் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களது முயற்சிகளில் ஆரம்பத்தில் தடைகள் இருந்தாலும், பிறகு வெற்றி கிடைக்கும். உறவுகளால் நன்மைகள், சந்தோஷங்கள் உண்டு. வேலையில் டென்ஷன், மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். வேலையில் பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள். இடம், வீடு மாற வாய்ப்புகள் உண்டு. விற்பனையாகாமல் இருக்கும் சொத்துக்கள் விற்பனையாகும். நீங்கள் வாங்கிய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெரிய அளவில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் தன்மை குறையும். தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும். இந்த வாரம் சனி பகவானை பிரதானமாக வழிபாடு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

Updated On 15 April 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story