2024 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத பயணங்கள், தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் போன்றவை ஏற்படும். உங்களது உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. வேலையில் கவனம் செலுத்துங்கள். காரணம் வேலையில் இருந்து வெளியில் வரவோ, வெளியேற்றப்படவோ வாய்ப்புள்ளது. யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீர்கள். நோயில் இருந்து விடுபடுவீர்கள். பெரிய அளவில் கடன் இருந்தால், இறையருளால் அந்த கடன்கள் அடையும். தேவையில்லாத குழப்பங்கள், சிந்தனைகள் வேண்டாம். தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. விவசாயம் செழிப்பாக இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவை பிரிந்து இருப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அப்பாவின் அன்பு, ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். யாரையும் நம்ப முடியாது, நம்பாமலும் இருக்க முடியாது என்பதால் இரண்டும் கெட்டான் மனநிலையில் இருப்பீர்கள். விற்காமல் இருக்கும் சொத்துக்கள் விற்பனையாகும். இந்த வாரம் ஆஞ்சநேயர் மற்றும் தன்வந்திரி பகவானை வழிபாடு செய்தால் நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் கிடைக்கும்.

Updated On 23 April 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story