2024 ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எந்த துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும், இந்த வாரம் வேலையில் மிகவும் கவனமாக இருங்கள். எதிர்பாராத பயணம் இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் நிறைய உள்ளது. இந்த வாரத்தில் உங்களது உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. பணம், பொருள் விஷயத்தில் கவனமாக இருங்கள். கல்வி சிறப்பாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்ஷனுக்கு தகுந்த விற்பனை, லாபம் இருக்கிறது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் பொறுமையாகவும், நிதானமாவும் செயல்படுங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். சொந்த தொழிலும் சரி, கூட்டுத்தொழிலும் சரி அவ்வளவாக சிறப்பாக இல்லை. திருமண வாழ்க்கையும் அப்படித்தான். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். பாஸ்போர்ட், விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால் வர வாய்ப்புள்ளது. இந்த வாரம் சிவன் மற்றும் பெருமாள் தரிசனம் அவசியம்.

Updated On 29 April 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story