2024 மே 7-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், டூர், டிராவல், குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் இவை அனைத்துமே இருக்கிறது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வீடு மாற வேண்டும் என்றும், பழைய பொருட்களை கொடுத்துவிட்டு புதிய பொருட்களை வாங்க வேண்டும் என்றும் நினைப்பவர்களுக்கு எல்லாம் அதற்கான சூழல் சாதகமாக இருக்கிறது. தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். தெளிந்த சிந்தனையோடு செயல்படுங்கள். நினைப்பது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை ஒரு பக்கம் வேலை, சம்பாத்தியம் இருந்தாலும் கூட, இன்னொரு பக்கம் வேலையை விட வேண்டிய சூழ்நிலைகள் அல்லது வேலையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய காலகட்டங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. அதனால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. ஷேரில் முதலீடு செய்வதாக இருந்தால் அடக்கி வாசியுங்கள். லாட்டரி டிக்கெட் வாங்கினால் யோசித்து செய்யுங்கள். ரேஸ் மற்றும் டிரேடிங்கில் முதலீடு செய்யும்போது மிக மிக கவனமாக இருங்கள். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. இந்த வாரம் பிரம்மா வழிபாடும், விநாயகர் தரிசனமும் முக்கியம்.

Updated On 6 May 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story