2024 மே 28-ஆம் தேதி முதல் ஜூன் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுடைய வேலை நன்றாக உள்ளது. பணி உயர்வு, சம்பள உயர்வு, மானிட்டரி பெனிஃபிட்ஸ் போன்றவற்றிலான மாற்றங்களை தவிர, வேலையில் வேறு பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் இல்லை. நேரடி, மறைமுக எதிரிகள் யாராக இருந்தாலும் ஜெயிப்பீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். இன்டர்வியூ அட்டன் செய்திருந்தால் தேர்வு செய்யப்படுவீர்கள். உங்களின் வெற்றி பெரிய அளவில் உறுதி செய்யப்பட்டதாக இருக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வங்கி கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். மனைவி அல்லது கணவன் இருவரில் யாராவது ஒருவர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். காரணம் இந்த வாரத்தில், தேவையில்லாத விரயம், வைத்தியச் செலவுகள் இருக்கிறது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில், பணம், தனம், பொருள் இருக்கும். உங்களின் எண்ணங்கள் செயலாக்கம் பெரும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. தேடுதல் என்பது அதிகமாக இருக்கிறது. இளைய சகோதர - சகோதரிகளுக்கு உங்களால் வேலை கிடைக்கும். நெருங்கிய உறவுகளால் தேவையில்லாத செலவினங்கள் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. அப்பாவின் அன்பு, ஆதரவு உண்டு. இந்த வாரம் முழுவதும் பைரவரையும், விநாயகரையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 27 May 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story