2024 ஜூன் 04-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரத்தில் உங்களின் வேலை வாய்ப்புகள் நன்றாக உள்ளன. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். நீங்கள் கேட்ட இடத்தில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும். சோம்பேறித்தனத்தை தவிர்த்து செய்ய நினைக்கும் வேலைகளை உடனடியாக செய்யுங்கள். நேரடி, மறைமுக எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றி கொள்வீர்கள். நல்லதொரு வேலையாட்கள் அமைவார்கள். சொந்த தொழில் சுமாராக இருக்கும். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவி உறவில் பிரிவு அல்லது இருவரில் யாராவது ஒருவருக்கு விரயச் செலவுகள், வைத்தியச் செலவுகள் அதிகமாக உள்ளன. உங்களின் ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சாதாரண முதலீடே செய்யுங்கள். நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். இதுதவிர டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட, டிஜிட்டல் கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்வதாக இருந்தால் செய்யலாம். அதிலும் ஓரளவுக்கு வருமானம் உள்ளது. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் ஏற்படும். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 3 Jun 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story