2024 ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுக்கான வெற்றி பெரிய அளவில் இருக்கிறது. சொந்த தொழில் சுமாராக உள்ளது. கூட்டுத்தொழில் செய்பவராக இருந்தால் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். திருமணம் நடைபெறாதவர்களுக்கு அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் அல்லது திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. பொருளாதார நிலைகளை பொறுத்தவரையில் வருமானம், சம்பாத்தியங்கள் இருக்கின்றன. ஆனாலும், கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளும் நிறைய உள்ளன. எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். நீங்கள் நினைப்பது நடக்கும். யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு ரூபத்தில் உங்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எண்ணங்கள் செயலாக்கம் பெரும். வீடு, இடம் நல்ல விலைக்கு விற்பனையாகும். அல்லது அது தொடர்பான பேச்சுவார்த்தைகள், அக்ரிமென்டில் கையெழுத்திடுவது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். புதிய சொத்துக்களையும் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். வேலை இல்லை என்ற நிலை இல்லாவிட்டாலும், பார்க்கும் வேலையை விட்டு வெளியே வரவேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை இந்த வாரத்தில் உள்ளது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த வாரம் முழுவதும் அம்பாள் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 10 Jun 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story