2024 ஜூலை 02-ஆம் தேதி முதல் ஜூலை 08-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. உங்களுக்கு ஏதோவொரு விதத்தில் வருமானங்கள் இருக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த, எதிர்பார்க்காத செய்திகள் நன்மையாகவே முடியும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மைகள் ஏற்படும். புதிய காதல் மலரும். ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் வெற்றியடையும். முறிந்துபோன காதல் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. அம்மா மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். ஏனென்றால், லாபம் வருவது போன்ற தோற்றம் இருந்தாலும், பெரிதாக லாபம் இல்லை. உங்களிடம் வேலை பார்ப்பவர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். நல்ல வேலையாட்கள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உண்டு. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். சொந்த தொழில் சுமாராக இருக்கும். சிறுதொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் செய்பவர்களாக இருந்தால் நல்லதொரு முன்னேற்றம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் சிவன் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய நந்தி பெருமானை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 2 July 2024 9:15 AM GMT
ராணி

ராணி

Next Story