2024 ஜூலை 09-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பரவாயில்லாமல் இருக்கும். யாரையும் நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பங்கள், தெளிவற்ற தன்மை இருந்து கொண்டே இருக்கும். ஆனாலும், யாரையும் நம்பியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதிர்பாராத விதமாக நீங்களே ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மனத் தெளிவு மிகவும் முக்கியம். உங்கள் எண்ணங்கள் எந்த அளவுக்கு தெளிவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நீங்கள் வெற்றி பெறுவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு முன் ஒரு தடவைக்கு மேல் நன்கு யோசித்து செயல்படுங்கள். முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுங்கள். இந்த வாரத்தில் லோன் அல்லது கடன் பெற்று வீடு, இடம் வாங்க வாய்ப்புகள் உள்ளன. தேவை இருந்தால் கடன் வாங்குங்கள். இல்லையென்றால் தவிர்த்துவிடுங்கள். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறாமல் இருந்தால் நடைபெறும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் இரண்டுமே சுமார். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப் ஆகியவற்றிற்கு விண்ணப்பித்திருந்தால் இந்த வாரத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் சிவபெருமானை வழிபாடு செய்தால் வாழ்வில் மாற்றம் ஏற்படும்.

Updated On 9 July 2024 7:20 AM GMT
ராணி

ராணி

Next Story