2023, அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 -ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

குல தெய்வ வழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். குழந்தைகள் வழியில் சாதகமான பலன்கள் கிட்டும். குழந்தைகள்மீது அக்கறை எடுப்பீர்கள். சிறு முயற்சிகள் மூலம் லாபம் கிடைக்கும். 30, 31 தேதிகளில் கடன் மற்றும் வேலைவாய்ப்புகளில் நல்ல பலன் கிடைக்கும். அதேசமயம் வேலை ஸ்தலங்களில் சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். 2, 3 தேதிகளில் நண்பர்கள் மற்றும் மனைவி வழியில் நன்மைகள் கிடைக்கும். 4, 5, 6 தேதிகளில் கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாக பெண்கள் மற்றும் தாயாரிடம் கவனமாக இருக்கவேண்டும். தூர தேச பிரயாணங்களை கட்டாயம் தவிர்த்திடுங்கள்.

Updated On 31 Oct 2023 12:00 AM IST
ராணி

ராணி

Next Story