2025 மே 06-ஆம் தேதி முதல் 2025 மே 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் பொறுமையும், நிதானமும் மிகவும் முக்கியம். திருப்தி இல்லாத மனநிலையில் இருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும் கவனமுடன் இருங்கள். குறிப்பாக, உடன் பணியாற்றுபவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். கடன் வாங்கியாவது இடம், வீடு, வண்டி, வாகனம் அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உங்கள் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்புகள் இல்லை. தொழிலில் பெரிய லாபம் எதுவும் இருக்காது. மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடையவும் வாய்ப்புகள் இருக்கிறது. டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். உங்களது மற்றும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் எதிர்பாராத செலவுகள் நிறைய வரலாம். தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். இந்த வாரம் முழுவதும் முருகப்பெருமானையும், சிவன் கோவிலில் நவகிரகத்தில் இருக்கும் சனி பகவானையும் வழிபாடு செய்யுங்கள்.
