2025 மே 13-ஆம் தேதி முதல் 2025 மே 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் தொழிலில் பொறுமை மிகவும் அவசியம். லாபங்கள் பெரிதாக இருக்காது என்பதால் சொந்த தொழிலில் முதலீடுகள் செய்ய வேண்டாம். கூட்டுத்தொழிலில் உங்கள் பார்ட்னர் லாபம் அடைவார். உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். உங்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. கையில் பணம் இருந்தாலும், அதற்குத் தகுந்த செலவுகளும் இருக்கும். பெரிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். உறவுகளால் நன்மை, பிரச்சினை இரண்டும் கலந்து இருக்கும். உங்கள் பயணத்தில் ஒரு சிறிய தடை ஏற்பட்டு விலகும். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் ஏதோ ஒரு விதத்தில் தாமதமாகலாம். எதிர்பாராத மகிழ்ச்சி, சந்தோஷம், பொழுதுபோக்கு, சுற்றுலா அல்லது பயணம் போன்றவை அமைய வாய்ப்புகள் உள்ளன. வேலை விஷயத்தில் கவனமாக இருங்கள். நீங்கள் பார்க்கும் வேலையை விட்டு வெளியேற வேண்டிய அல்லது வெளியேற்றப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. வேலை சம்பந்தமான ஒரு பயம், இனம்புரியாத கலக்கம் உங்கள் மனதில் இருக்கலாம். கடன் கிடைக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. உடல் உழைப்பில் கவனம் தேவை. எல்லாம் இருந்தும் எதிலும் ஒரு திருப்தி அற்ற மனநிலையில் இருப்பீர்கள். இந்த வாரம் முருகப்பெருமானையும், குறிப்பாக மகாலட்சுமியையும் நன்றாக வழிபட்டு வாருங்கள்.
