2025 மே 27-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வர வாய்ப்புகள் அதிகம். சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து, சுறுசுறுப்புடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். உங்கள் லட்சியத்தை அடைய திட்டமிட்டு செயல்படுங்கள். முயற்சி ஸ்தானத்தில் ராகுவின் தாக்கம் இருப்பதால், தகவல் தொடர்பு மூலம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். உறவுகளால் நன்மையும் பிரச்சனையும் கலந்து வரும் என்பதால், பொறுமையுடன் நிதானமாக இருங்கள். உற்பத்தியில் இருப்பவர்களுக்கு விற்பனை அதிகரிக்கும். விவசாயத்தில் லாபம் உண்டு. இந்த வாரம் பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்க்கவும். யூகம் சார்ந்த வர்த்தகம் லாபம் தருவது போல் தோன்றினாலும், கவனமாக இருங்கள். காதல் உறவுகளில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை வாய்ப்புகள் பரவாயில்லை. எதிர்பார்த்த வேலை கிடைக்கும். கடன் கிடைக்கும். கடனைப் பெற்று சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு. வியாபாரத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். கணவன் மனைவி உறவில் பிரச்சனைகள், பிரிவுகள், அதனால் செலவுகள் அல்லது நஷ்டம், ஆரோக்கிய குறைவு மற்றும் மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரம் முருகனையும், சிவபெருமானையும் வழிபடுவது நன்மை பயக்கும்.

Updated On 27 May 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story