2025 ஜூன் 03-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் எண்ணங்களையும், சிந்தனைகளையும் தெளிவாக வைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். உறவுகளைப் பேணுவது முக்கியம். ஏனெனில் உறவுகளால் ஒரு பக்கம் நன்மை ஏற்பட்டாலும், தேவையற்ற மன வருத்தங்களும் பிரச்சனைகளும் வரலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும், உங்கள் உடல் நிலையிலும் இந்த வாரம் கவனம் தேவை. வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை, வேலை மற்றும் வருமானம் உண்டு. தொழில் ரீதியாகவும், பதவியிலும் நல்ல முன்னேற்றம் காணலாம். புகழும், அந்தஸ்தும் கூடும். கூட்டுத்தொழிலில் உங்களுக்கு சுமாரான லாபமே இருக்கும். மண வாழ்க்கை ஓரளவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ராசியை குருவும், சனியும் சேர்ந்து பார்ப்பதால், எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவு வெற்றி பெறுவீர்கள், இல்லையென்றால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களை அறியாத மகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்கலாம். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபத்தைத் தரலாம். உங்களுக்குப் பலன் கிடைக்காமல் போகலாம். உங்கள் பணம் மற்றும் பொருட்கள் முடக்கப்பட வாய்ப்புள்ளது. அவை வரும், ஆனால் எப்போது என்பது நிச்சயமற்றது. குறிப்பாக இந்த வாரம் பெண்களுக்காக அதிக செலவு செய்ய நேரிடும் சூழ்நிலைகள் உள்ளன. இந்த வாரம் நீங்கள் துர்க்கை மற்றும் காளியை வழிபடுவது நல்லது.

Updated On 3 Jun 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story