2025 ஜூன் 10-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் நன்றாக இருக்கிறது. அதே நேரம் வரவுக்கு ஏற்ற செலவும் இருக்கும். உங்கள் முயற்சிகள் சுமாராக இருக்கும். மற்றவர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். இடைத்தரகர்களைத் தவிர்க்கவும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விவசாயத்தில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபமும், மகசூலும் உண்டு. உற்பத்தி மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனை இருந்தாலும் லாபம் சுமாராகவே இருக்கும். வேலை வாய்ப்புகள் பரவாயில்லை. உயர்ந்த பதவியில் இருந்தாலும் திருப்தியற்ற மனநிலை ஏற்படலாம். அதை மாற்ற முயற்சி செய்யுங்கள். வியாபாரம் நன்றாக இருக்கும். தகவல் தொடர்பு, டிஜிட்டல், மீடியா, மார்க்கெட்டிங், ஏஜென்சி, போக்குவரத்து, லாஜிஸ்டிக் போன்ற துறைகளில் நல்ல லாபம் இருக்கும். உயர்கல்வி பயில நினைப்பவர்களுக்கு இந்த வாரம் நல்லது. எதிர்பாராத பயணங்களும் அதனால் மகிழ்ச்சியும் உண்டு. இந்த வாரம் முழுவதும், சிவபெருமானையும், அம்பாளையும் வழிபடுவது நல்லது.

Updated On 10 Jun 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story