2025 ஜூன் 24-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் பரவாயில்லை. சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்பாக இருங்கள். குருவின் பார்வையால் இறையருள் கிடைக்கும். தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பெரிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழும், அந்தஸ்தும் கூடும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை வேலை இருக்கும். ஆனால் வேலையில் சில தடுமாற்றம் இருக்கும். மேலும் உங்கள் வேலையில் அலட்சியமாக இருந்தால் வேலையை இழக்க நேரிடலாம். உயர்கல்வி படிக்க விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. இரண்டாம் திருமணம் செய்ய முயற்சிப்பவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. பாஸ்போர்ட், விசா கிடைக்காமல் தாமதமானவர்களுக்கு இந்த வாரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தயாரிப்பு துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல விற்பனை இருக்கும். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கும் பரவாயில்லை. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். பெண் நண்பர்களால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த வாரம், சிவன் மற்றும் மகாவிஷ்ணு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
