2025 ஜூலை 01-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசியை குரு பகவானும், சனி பகவானும் பார்ப்பதால், நன்மை தீமை இரண்டும் கலந்த வாரமாக இருக்கும். குருவின் பார்வை இருப்பதால், பிரச்சனைகளில் இருந்து மீள வாய்ப்பு உண்டு. வருமானங்கள் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் அதிகமாக இருக்கும். முயற்சி ஸ்தானத்தில் ராகு இருப்பதால், அவசர முக்கியமான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களில் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுங்கள். எல்லாமே வெற்றியைத் தருவது போல் தோன்றினாலும், முழுமையான வெற்றி இந்த வாரம் இல்லை. தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்து, எதை முதலில் செய்ய வேண்டும் என்பதில் தெளிவு பெறுங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனை இருந்தாலும், லாபம் கைக்கு வருவதில் தடைகள் இருக்கலாம். கல்வியில் கவனம் செலுத்துங்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலைவாய்ப்புகள் பரவாயில்லை; வேலை இல்லாமல் இருக்க மாட்டீர்கள். சனி பகவான் உங்கள் சேவை ஸ்தானத்தைப் பார்ப்பதால், வேலை கிடைக்கும் அல்லது நீங்கள் வேறு வேலைக்கு மாற வாய்ப்புகள் உண்டு. வியாபாரம் சுமாராக இருக்கும். திருமண வாழ்க்கை திருப்தியற்றதாக இருக்கும். உயர் கல்வியில் தடங்கல்கள் இருக்கலாம். நீண்ட தூர பயணங்களில் தடைகள் உண்டு. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் வழிபடவும்.
