2025 ஜூலை 08-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் பொருளாதார நிலைகள் பரவாயில்லை. புதிய முயற்சிகளில் உடனடியாக பெரிய அளவில் வெற்றியை எதிர்பார்க்க வேண்டாம். அனைத்தும் நன்மை நடப்பது போல தோன்றினாலும், சிறிய தடைகள் இருக்கும். சிறு தொழில், சுய தொழில், வீட்டில் இருந்து செய்யக்கூடிய தொழில்கள் சாதாரணமாக இருக்கும். எதிர்பாராத பயணம் உண்டு, ஆனால் அது சுமாராகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தாயின் உடல்நிலையிலும் கவனம் செலுத்துங்கள். குழந்தைகள் இருந்தால் அவர்களை விட்டுப் பிரிவதற்கான வாய்ப்பு அல்லது குழந்தைகளுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சுமாராகவே இருக்கும். வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை, வேலை மற்றும் வருமானம் உண்டு. வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஊக்கத்தொகை, போனஸ், நிலுவைத் தொகை அல்லது வேறு ஏதேனும் நிதிப் பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வருவது போல தோன்றினாலும், தடைகள் உண்டு. லாபம் சுமாராகவே இருக்கும். திருமண வாழ்க்கையில் சிறிய பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாகவே இருக்கும். உங்கள் வேலையில் அதிக முயற்சி எடுத்தால் அங்கீகாரம் கிடைக்கும். சிவ தரிசனம் மற்றும் பெருமாள் வழிபாடு இந்த வாரம் முழுவதும் செய்வது நல்லது.
