2023, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்
புத்திக்கூர்மை, தெளிவான சிந்தனை மற்றும் நிர்வாகத் திறனில் வெற்றி கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். தொழில், வியாபாரம், வெளிநாட்டு பயணத்தால் முன்னேற்றம் ஏற்படும். 27, 28 தேதிகளில் வாகனம் சார்ந்த விஷயங்களில் விபத்தோ அல்லது பிரச்சினையோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 29, 30 தேதிகளில் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு. குல தெய்வ வழிபாடு மற்றும் குழந்தைகளுடனான இணக்கம் நற்பலனை ஏற்படுத்திக் கொடுக்கும். 1, 2 தேதிகளை சரியான பயன்படுத்தினால் தொழில், வியாபாரம் மற்றும் சிறு முயற்சிகளில் வெற்றியடைய முடியும். வெளிநாட்டு தொடர்புடைய வியாபாரம் மற்றும் நபர்களால் சாதகமான பலன் கிடைக்கும். நீல நிறத்தை பயன்படுத்தினால் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும்.
