2024 ஜனவரி 2 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுடைய விருப்பம், ஆசை, எண்ணம், அபிலாஷை அனைத்தும் பூர்த்தியாகும். கையில் தனம், பணம் இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கும் சிறப்பாக இருக்கும். கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலம். அதுமட்டுமின்றி சிவில் மற்றும் கெமிக்கல் துறையில் இருப்பவர்களுக்கும் முன்னேற்றம் உண்டு. அப்பா மற்றும் அம்மாவின் அன்பு, ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். இந்த வாரம் லாபம் வரும்படியான தோற்றம் இல்லாததால் ஷேர் மார்க்கெட், ரேஸ் அல்லது லாட்டரி போன்றவற்றில் இன்வெஸ்ட்மென்ட் செய்ய வேண்டாம். விட்டதை பிடிக்க ஆசைப்பட வேண்டாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி இருக்கு. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றமும், முன்னேற்றமும் உள்ளது. விளையாட்டு துறைகளில் இருப்பவர்களுக்கு விருதுகள், பாராட்டுகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கண்டிப்பாக உண்டு. காதல் விஷயங்கள் பிரகாசமாக இல்லை. லவ் பிரேக் அப் ஆவதற்கான சூழல்தான் அதிகமாக உள்ளது. நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.

Updated On 8 Jan 2024 5:23 AM GMT
ராணி

ராணி

Next Story