2024 மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
செவ்வாய் பகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் இருப்பதால் நல்லதொரு வளம் அமையும். அம்மாவால் ஆக வேண்டிய காரியங்கள் நடக்கும். பொருளாதாரம் பரவாயில்லை. நன்கு செலவு செய்வீர்கள். நீண்ட நாட்களாக நகை, ஆடைகள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான சூழல்கள் உள்ளன. பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கும் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெரிய முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டாம். வேலையை பொறுத்தவரையில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. நல்லதொரு சம்பாத்தியங்கள் உண்டு. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் இந்த வாரத்தில் கிடைக்கும். எதிரிகளை ஜெயிப்பதற்கான வாரமாக இந்த வாரம் இருக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். பொறுமையாக இருப்பது நல்லது. சொந்த தொழிலை பொறுத்தவரையில், தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கும். கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். எதிர்பாராத நண்பர்கள் அமைவார்கள். உற்பத்தி மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நன்றாக உள்ளது. நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு நல்லதொரு முன்னேற்றத்தை கொடுக்கும்.
