2024 ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோசம் இருக்கும். மனதில் கவலை இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருப்பீர்கள். வேலையில் பிரச்சினை இல்லை. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். காரண காரியங்கள் இல்லாமல் கடன் வாங்காதீர்கள். சொந்த தொழில் பரவாயில்லை. தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருப்பதால் இந்த வாரம் உங்களுடைய உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பெரிய அளவில் இல்லாமல், சுமாரான அளவிலேயே முதலீடு செய்யுங்கள். விட்டதை பிடிக்க ஆசைப்பட வேண்டாம். குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அவர்களால் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருந்துகொண்டே இருக்கும். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மர் மற்றும் பைரவரை வழிபடுவதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

Updated On 2 April 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story