2024 மே 21-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

மகிழ்ச்சி, சந்தோஷம், எதிர்பாராத பயணம், டூர் ஆகியவை உள்ளன. உங்கள் வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. ஏதோவொரு வேலை, வருமானம், சம்பாத்தியம் இருக்கிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீங்கள் நினைப்பது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. யாருடைய பணமாவது உங்கள் கையில் இருந்துகொண்டே இருக்கும். வேலையில் எதிர்பார்க்கக்கூடிய சம்பள உயர்வு, பணி உயர்வு போன்றவற்றிற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உண்டு. சொந்த தொழில் சுமாராக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்க்ஷனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. நண்பர்களால் நற்பலன்கள் உண்டு. இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வாரை வணங்கினால் மிகுந்த நன்மை ஏற்படும்.

Updated On 21 May 2024 7:42 AM GMT
ராணி

ராணி

Next Story