2024 ஆகஸ்ட் 06-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
குழப்பமான மனநிலைகள் நீங்கி உங்களின் எண்ணம், சிந்தனைகள் செயலாக்கம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு தெய்வ அனுகூலம் இருக்கிறது. திருமணம் நடைபெறாதவர்களுக்கு அது சம்மந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முதலீடு செய்யுங்கள். சுமாரான ரிட்டன்ஸ் கிடைக்கும். வேலையை பொறுத்தவரை பிரச்சினை இல்லை. அதில், மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். எந்த துறையில் பணியாற்றினாலும் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய முன்னேற்றங்கள் இருக்கின்றன. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய வருமானங்கள் ஏதோவொரு வகையில் செலவாகிவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஸ்டார்ட் அப் நிறுவனம், இன்டஸ்ட்ரி தொடங்க நினைப்பவர்கள் தெய்வ அனுகூலம் அல்லது உங்களின் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் ஆரம்பியுங்கள். எது எப்படி இருந்தாலும் உங்கள் மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை மற்றும் நல்ல நண்பர்கள் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விட்டதை பிடிக்க ஆசைப்படாதீர்கள். அதற்கான சூழ்நிலைகள் இல்லை. உங்கள் காதல் விஷயங்கள் வெற்றியடைவதில் தடைகள், போராட்டங்கள் இருக்கின்றன. காதல் திருமணத்தில் பொறுமை, நிதானம் அவசியம். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.