2023, செப்டம்பர் 5 முதல் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

அலுவலக இடத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் பயன்படுத்தும் நுட்பங்கள் மற்றும் செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். துணைவரின் ஆதரவு பெருகும். சகபணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள் ஆனால் உங்களுக்கு கீழ் பணிபுரிவோர் சரியாக செயல்பட மாட்டார்கள். உங்கள் பேச்சால் மற்றவர் காயப்படலாம். எனவே பேச்சில் கவனம் தேவை. 5-ஆம் தேதி மதியத்துக்கு மேல், 8, 9 மற்றும் 10-ஆம் தேதிகள் உங்களுக்கு சிரமமானதாக இருக்கும். குழந்தைகளுடன் பிரச்சினைகள் உண்டாகும். ஆனால் குடும்பத்தினருடன் உறவு சிறப்பாக இருக்கும்.

Updated On 6 Sep 2023 10:11 AM GMT
ராணி

ராணி

Next Story