2024 ஜனவரி 23 முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் சம்பாத்தியங்கள் உங்கள் கையில் பணமாகவோ, தனமாகவோ இருக்கும். பேச்சின் மூலம் சம்பாதிப்பவர்களுக்கு வருமானம் கிடைக்கும். சில முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள். உங்களுடைய சகோதர - சகோதரிகள், உறவினர்களால் நற்பலன்கள் கிடைக்கும். தேவையில்லாத குழப்பம் வேண்டாம். தைரியமாக செயல்படுங்கள். நன்மை உண்டாகும். அம்மா மற்றும் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வங்கி கடன் கிடைக்கும். நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள். ஷேர் மார்க்கெட்டில் முதலீடுகள் செய்வதில் கவனம் தேவை. சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் சிறப்பாக உள்ளதால் லாபம் கிடைக்கும். தொலைதூர பயணம் செய்யலாம். எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். விநாயகர் வழிபாடு ஏற்றத்தை தரும்.

Updated On 23 Jan 2024 2:22 AM GMT
ராணி

ராணி

Next Story