2024 மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சிவில், மோட்டார், கெமிக்கல், ஆட்டோமொபைல், டிரான்ஸ்போர்ட், கட்டுமானம் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக உள்ளது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வேலையை பொறுத்தவரை எந்த துறையில் பணியாற்றுபவர்களாக இருந்தாலும் ஒரு திருப்தியான மனநிலையில் இருக்க மாட்டீர்கள். எப்போதும் டென்ஷன், வருத்தங்கள் இருந்துகொண்டே இருக்கும். திருமண வாழ்க்கையை பொறுத்தவரை மகிழ்ச்சி, சந்தோஷம் இருந்துகொண்டே இருக்கும். சொந்த தொழிலும் நன்றாக உள்ளது. தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை, அதனால் தொழில் விட்டுவிட்டு நடந்துகொண்டிருக்கும். எதிர்பாராத பண வரவுகள் அல்லது கணவன் மூலமாகவோ, மனைவி மூலமாகவோ பொருட்கள், முன்னோருடைய சொத்துக்கள் ஆகியவை வர வேண்டியது இருந்தால் வரும். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். சிவன் மற்றும் பெருமாள் வழிபாடு ஏற்றத்தை தரும்.
