2023, நவம்பர் 28 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீண்ட நாட்களாக சொத்துகள் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். பழைய பொருட்களுக்கு பதிலாக புதிய பொருட்களை வாங்குவீர்கள். கல்வி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் ஜாக்கிரதையாக இருங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டு. சிவில், ஆட்டோ மொபைல் மற்றும் மெக்கானிக்கல் தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. வேலை இல்லை என்ற சூழல் இருக்காது. படிப்புக்கு தகுந்த வேலை, வேலைக்கு தகுந்த சம்பளம் கிடைக்கும். வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். ஷேர் மார்க்கெட், ஆன்லைன் பிஸினஸில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் தொடங்க நினைப்பவர்கள் தொடங்கலாம். தேவையில்லாமல் பணம், கடன் கொடுக்கவேண்டாம். கொடுத்தால் திரும்ப வராது. முருகன், மகா லட்சுமி தரிசனம் நல்லது.

Updated On 28 Nov 2023 12:01 AM IST
ராணி

ராணி

Next Story